×

திருமழிசையில் ஒதுக்கப்பட்ட கடைகளை தவிர பிற இடங்களில் விற்றால் பொருட்கள் பறிமுதல்: கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருமழிசை தற்காலிக சந்தையில் ஒதுக்கப்பட்ட கடைகளை தவிர்த்து பிற இடங்களில் பொருட்களை வைக்கும் உரிமையாளர்களின் கடைகள் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை துணைக்கோள் நகரில் தற்காலிக சந்தை தற்போது செயல்படுகிறது. இந்த தற்காலிக சந்தையை திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி, வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி,  எஸ்.பி. அரவிந்தன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், சந்தைக்கு வரும் வாகனங்கள், பொருட்களை இறக்கியவுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதேபோல், கடை உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை தவிர்த்து, பிற இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பொருட்களை வைத்து வியாபாரம் செய்தால் கடைகள் பறிமுதல் செய்யப்படும். மேலும், முககவசம் அணியாமல் வந்த 62 நபர்களிடம் தலா 100 வீதம் இதுவரை 6,200 அபராதம் வசூலிக்கப்பட்டடுள்ளது. இனிவரும் காலங்களில் முககவசம் அணியாதவர்களிடம் 200 அபராதம் வசூலிக்கப்படும் என்றார்.


Tags : elsewhere ,stores ,Collector , Contemporary, stores,, goods confiscated, corona, curfew, collector
× RELATED மதுபானம் பறிமுதல்