×

குட்கா கடத்திய இருவர் சிக்கினர்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கவரப்பேட்டை எஸ்.ஐ. சிவராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை   மடக்கிப்பிடித்தனர். சோதனையில், குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. பின்பு இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த இருவரையும் பிடித்து கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  ஆத்துப்பக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதாபன் (28), கவரபேட்டை சோம்பட்டு பகுதியைச்சேர்ந்த   ராஜ்குமார்  (32) என தெரியவந்தது. மேலும், காரனோடையில் இருந்து கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய இருந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து 50 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags : Kutka , Stocking, smuggling, two arrested
× RELATED சென்னையில் குட்கா, மாவா புகையிலை...