×

கோயிலில் நகைகள் கொள்ளை

புழல்: செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் புழல் யூனியன் சாலையில் பழமையான ராவல் கன்னியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜைகள் முடிந்து பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் கோயில் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, வெள்ளியால் ஆன பூஜை பொருட்களை கொள்ளையடித்து தப்பிசென்றனர். இந்நிலையில், நேற்று காலை பூசாரி கந்தசாமி கோயிலை திறக்க வந்தார். அப்போது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டு, 50 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் பூஜை பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

மேலும், திருடர்கள் உண்டியலை உடைக்க முடியாததால், அதில் இருந்த பணம் கொள்ளை போகாமல் தப்பியது.  இதுகுறித்த புகாரின்பேரில், செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கோயில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : jewelery , jewelery,temple
× RELATED அம்மன் கோயிலில் நகைகள் கொள்ளை