×

பகுதி வாரியாக பிரித்து வைரஸை கட்டுப்படுத்தும் திட்டம் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னையில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை பகுதி வாரியாக பிரித்து கட்டுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி:  சென்னையில் 70 முதல் 75 சதவீதம் வைரஸ் பாதிப்பு ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் தான் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள மக்கள்  கட்டாயம் முகக்கவசம்  அணிய வேண்டும்.

நோய் அதிகம் பாதித்த ராயபுரம் பகுதியில் 10 இடங்களில் உள்ளவர்களை அருகில் உள்ள சமுதாய கூடங்களில் மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 6-7 மண்டலங்களில் நோய் தாக்கம் குறைவாக உள்ளது. கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் கோயம்பேடு தாக்கம் அதிகம் உள்ளது. குறுகிய பகுதிகளில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது
மேலும் 2000 குடியிருப்புகள் நோய் பாதிப்புக்கான இடங்களாக கண்டறிந்து காய்ச்சலுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 80 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல்தான் கொரோனோ பாதிப்பு ஏற்படுகிறது. 65 வார்டுகளில் 10க்கும் குறைவாகவே நோயாளிகள் உள்ளனர்.

வைரஸ் பாதித்தவர்கள் 11-12 நாட்களில் குணமாகி வீடு திரும்புகின்றனர். இரண்டு நாட்களுக்குள்ளாக 250 பேர் குணமாகி வீடு திரும்ப உள்ளனர்.
 சாப்பிடும் போது புரையேறினால் கூட எங்களை பிடித்து சென்றுவிடுவார்களோ என்ற பயம் உள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். அங்கெல்லாம் தன்னார்வலர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் சவாலாகவும் உள்ளன.  இது நோய் அல்ல, வைரஸ் கிருமி, முகக்கவசம் அணிந்தால் இருப்பிடம் இல்லாமல் போய்விடும். சென்னையில் நோய் பாதித்தவர்களின் தொடர்புகளையும் கண்டறிந்து விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

5 பேருக்குமேல் பாதித்தால் தெருவுக்கு கட்டுப்பாடு
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், ஒரு நபருக்கு 3 முகக்கவசம் வீதம் குடிசைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வழங்கப்
படும். இனிமேல் 5 நோயாளிகளுக்கு மேல் வந்தால் தான் அவர்கள் இருக்கும் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். ஒருவர், 2 பேர் வந்தால் அந்த வீடுகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட இடமாக இருக்கும் என்றார்.

Tags : Radhakrishnan ,public ,area ,division , Coronavirus, public, face mask, special officer Radhakrishnan
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்