×

மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஓட்டம்

சென்னை:  கோயம்பேடு சின்மயா நகர் பகுதியை சேர்ந்த 43 வயது நபர், கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால், சக தொழிலாளர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, மேற்கண்ட நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 12ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை திடீரென மாயமானார்.

வழக்கமாக, கொரோனா நோயாளிகளுக்கு மருந்து கொடுக்க மருத்துவமனை ஊழியர்கள் வார்டுக்கு வந்தபோதுதான், அவர் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சம்பவம் குறித்து மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைதொடர்ந்து தலைமறைவாக உள்ள அந்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  அரசு பொது மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகள் தப்பி ஓடும் சம்பவம் அடிக்கடி நடைபெறுவதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம்  உள்ளது.


Tags : Corona ,hospital , Corona patient , hospital
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...