×

கொரோனா பாதிப்பால் ரபேல் விமானங்கள் வருகை மேலும் 2 மாதங்கள் தாமதம்: ஜூலையில் ஒப்படைக்க திட்டம்

* பிரான்சில் இருந்து இந்தியா வருவதற்கு 10 மணி நேரமாகும்.
* ரபேல் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை 7 இந்திய விமானிகள் அடங்கிய முதல் குழு ஏற்கனவே பிரான்ஸ் சென்று முடித்துள்ளது.
* கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு 2வது இந்திய விமானிகள் குழு பயிற்சிக்காக பிரான்ஸ் செல்லும்.
* இந்தியா வரும் ரபேலுக்கு நடுவழியில் பிரான்ஸ் விமானப்படைக்கு சொந்தமான டேங்கர் விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பும்.

புதுடெல்லி:  பிரான்சிடம் இருந்து வாங்கப்படும் ரபேல் விமானங்களில், முதல் கட்டமாக 4 விமானங்கள் வரும் ஜூலையில் இந்தியா கொண்டு வரப்படுகிறது.பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரூ.60 ஆயிரம் கோடியில்  36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016ம் ஆண்டு அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் பெரும் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 4 விமானங்களை இந்த மாத இறுதியில் இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பரவல்  காரணமாக இருநாடுகளிலும் ஏற்பட்டுள்ள முடக்கம் மற்றும் நடைமுறை சிக்கல்கள்  காரணமாக போர் விமானங்களை டெலிவரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விமானங்களை ஒப்படைப்பதில் மேலும் 2 மாதங்கள் தாமதமாகி இருக்கிறது.

 இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுகையில்,  ‘‘இரட்டை இருக்கை கொண்ட 3 ரபேல் பயிற்சி விமானங்கள், ஒரு இருக்கை கொண்ட போர் விமானம் ஆகியவை வரும் ஜூலை மாதம் இறுதியில் அம்பாலா விமான தளத்தை வந்தடையும். இவை இந்திய விமானப்படையின் பலத்துக்கு மேலும் வலுசேர்க்கும்,’’ என்றனர்.

Tags : flights ,Rafael ,Corona , Corona, Raphael Planes, France, India
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...