×

பாகிஸ்தானில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்ட நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படுகிறது.  பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. நேற்று புதிதாக 1,430 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,218 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வைரஸ் பாதித்த 10,155 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நோய் பாதித்த 33 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 803 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இங்கு கடந்த வாரம் முதலே ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனை தொடர்ந்து, இன்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 68 விமானங்கள், லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 32 விமானங்கள், இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 32 விமானங்கள், கட்டா விமான நிலையத்தில் இருந்து 4 மற்றும் பெஷாவர் பச்சாகான் விமான நிலையத்தில் இருந்து 4 விமானங்களும் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.  கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 200 நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து விதமான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இதில், பாகிஸ்தான் மட்டுமே உள்நாட்டு விமான போக்குவரத்தை துவங்குவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.Tags : airline ,Pakistan , Pakistan, Domestic Airlines, Corona, Curfew
× RELATED ஊரடங்கு அறிகுறி மிஸ்சிங் சென்னையில் விமான சேவை வழக்கம்போல் இயங்கின