×

சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையா? அவ்ளோதான் கதம்... கதம்: டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: கொரோனா விஷயத்தில் காட்டிய ‘விளையாட்டால்’ கடும் கோபத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘சீனாவுடன் இனி வார்த்தக பேச்சுவார்த்தை நடத்த முடியாது,’ என அறிவித்துள்ளார். அமெரிக்கா- சீனா இடையே வரி விதிப்பு தொடர்பாக கடந்தாண்டு கடுமையான வர்த்தக போர் நடந்து வந்தது. பின்னர், சமாதானமாகி மோதலை தீர்த்துக் கொள்ள ஒப்பந்தம் செய்தன. ஆனால், தனது நாட்டில் உள்ள வுகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் பற்றிய தகவலை சீனா மூடி மறைத்து விட்டதால்தான், தனது நாட்டில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கோபத்தில் இருக்கிறார். இதனால், சீனாவின் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘வர்த்தக மோதல்  தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், சீனாவின் தற்போதைய செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கிறது. எனவே, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை. அமெரிக்க பொருட்கள் மீது பிற நாடுகள் வரி விதிக்கின்றன. ஆனால், சீனா தனது நாட்டின் பொருட்கள் மீது வரி விதிக்க அமெரிக்காவை அனுமதிப்பதில்லை. உலகத்துக்கு அவர்கள் மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். அதுவே, இப்போது அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது,’’ என்றார்.

பல லட்சம் முதலீடு ரத்து நாங்களும் கெத்து காட்டுவோமில்ல
அமெரிக்கர்களின் ஓய்வூதிய நிதியில் இருந்து பல லட்சம் கோடியை சீனாவில் அமெரிக்கா முதலீடு செய்து வருகிறது. இப்போது திடீரென இந்த முதலீடுகளை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நியூயார்க் பங்கு சந்தை, நாஸ்டாக் பட்டியலில் இடம் பெற்றுள்ள அலிபாபா போன்ற சீன நிறுவனங்கள், அமெரிக்காவின் விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. இது பற்றி கருத்து கூறிய டிரம்ப், ‘‘பிற நாடுகள் கண்டிப்பு மிக்கவையாக காட்டிக் கொள்ள விரும்பினால், அமெரிக்காவாலும் அதை செய்ய முடியும்,’’ என்றார்.

Tags : Trade talks ,China , China, Trade Negotiations, Trump, Corona
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...