×

கர்நாடகாவில் முதல் தோல்வி: முதியவரை கைவிட்ட பிளாஸ்மா சிகிச்சை

பெங்களூரு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 82 ஆயிரம் பேரில் 35 சதவீதத்தினருக்கு மேல் சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர். இதனால், இவர்களின் ரத்தத்தில் கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். இவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்து, புதிதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தால் அவர்கள் குணமாகும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் இந்த சிகிச்சை அளிப்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அனுமதி அளித்துள்ளது. இந்த சிகிச்சை திட்டத்தை கேரள அரசு அமல்படுத்தி, பல நோயாளிகளை குணமாக்கி உள்ளது. கர்நாடகாவிலும் கடந்த மாதம் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை தொடங்கி வைக்கப்பட்டது.

இருப்பினும், ஒருவருக்கும் இதில் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஆந்திர  மாநிலம், ஆனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கொரோனா பாதித்தது. இவருடைய உடல் நிலை கடுமையாக பாதித்ததால், இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்து காப்பாற்றும்படி குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த 11ம் தேதி டாக்டர்கள் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்தனர். கொரோனாவில் இருந்து மீண்ட 6 பேர் அவருக்கு  ரத்தம் கொடுத்தனர். இந்த சிகிச்சையால் 4 நாட்களாக உடல்நிலை தேறியிருந்த அவர்,  நேற்று முன்தினம் இரவு திடீரென இறந்தார். ஆனால், அவர் மாரடைப்பு  ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் கூறினர்.



Tags : Karnataka , Karnataka, Elderly, Plasma Therapy, Corona, Curfew
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...