×

டிஜிட்டல் பரிவர்த்தனை மார்ச்சில் 46% சரிந்தது

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 46 சதவீதம் சரிந்து விட்டதாக, புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது. வங்கிகள் வழங்கிய புள்ளி விவரங்களின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 156.5 லட்சம் கோடி அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டு மார்ச்சில் 292 லட்சம் கோடியாக இருந்தது.  
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆடிஜிஎஸ் பரிவர்த்தனைகள் 37 சதவீதம் சரிந்துள்ளது. 120 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆடிஜிஎஸ் பரிவர்த்தனையும் 12 சதவீதம் குறைந்துள்ளது. 1.18 கோடி பரிவர்த்தனைகள் மட்டுமே நடந்துள்ளன. இதுபோல், ஏடிஎம்களில் பணம் எடுப்பது 13 சதவீதம் சரிந்து 2.51லட்சம் கோடியாக உள்ளது. பரிவர்த்தனைகள் 62 சதவீதம் சரிந்துள்ளன.  கார்டு மூலம் கடந்த மார்ச் மாதத்தில் 1.15 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. முந்தைய ஆண்டு இது 4 லட்சம் கோடியாக இருந்தது.  டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்குவது 25 சதவீதம், கிரெடிட் கார்டு பயன்படுத்துவது 20 சதவீதம் குறைந்துள்ளது. இதுபோல் ஆன்லைனில் டெபிட் கார்டு பயன்படுத்துவது 18.5 சதவீதம், கிரெடிட் கார்டு பயன்படுத்துவது 17 சதவீதம் சரிந்துள்ளன என வங்கிகளின் புள்ளி விவரம் மூலம் ரெிய வந்துள்ளது.

Tags : Digital transactions, fell 46%
× RELATED மே-02: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!