×

பாளை திமுக எம்எல்ஏ மகன் சென்னையில் மரணம்: கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல்

நெல்லை:பாளையங்கோட்டை  திமுக எம்எல்ஏ டிபிஎம் மைதீன்கான், நெல்லை டவுனில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  திமுக ஆட்சியில் கடந்த 2006 முதல் 2011 வரை சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தவர். இவருக்கு ஒரு  மகன், ஒரு மகள்.  சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் 54 வயதான மகனுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சளி, இருமல் தொந்தரவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை,  வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

சளி  தொந்தரவு இருந்த நிலையில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்த தகவல் சென்னையில் உள்ள  அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது.  சளி தொந்தரவு இருந்ததால்  அவரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.  இதில் அவருக்கு தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Tags : Bali DMK MLA ,Chennai ,Mathrubhumi ,Corona , Death of MLA of Madurai, Madurai, confirmed by Corona
× RELATED எஸ்.ஐ மகனுக்கு சரமாரி வெட்டு