×

காசியிடம் ஏமாந்த விஐபிக்களின் பெண் வாரிசுகள் வாய் திறக்க மறுப்பு: மகள்களின் வீடியோவை காட்டி தாயாரை சீரழித்த கொடூரம்

நாகர்கோவில்: குமரி காவல்துறையில் உள்ள பலர் காசி மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதால், ஆபாச வீடியோ தொடர்பாக பல விஐபிக்களின் பெண் வாரிசுகள் மவுனம் காத்து வருகிறார்கள்.  நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி என்ற சுஜி (26), சமூக வலை தளங்களில் பழகி பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதாகி உள்ளார். இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் உள்ள வீடியோக்களில் இருக்கும் இளம்பெண்கள் பற்றி காவலில் எடுத்து விசாரித்தார்கள். அப்போது, தன்னுடன் 2 நண்பர்கள் கூட்டாளிகளாக இருந்தனர் என சுஜி தெரிவித்தார்.

இதன்பின், அந்த வீடியோக்கள் தொடர்பாக சில விவரங்களை மட்டும் போலீசாரிடம் சுஜி  கூறினார். சில வீடியோக்கள் மற்றும் போட்டோக்களில் இளம்பெண்கள் போதையில் உள்ளனர். வீடியோவில், இளம்பெண்கள், மாணவிகள் மட்டுமின்றி திருமணமான குடும்ப பெண்கள் சிலரும் உள்ளனர். இவர்களில் மகள்களை ஏமாற்றிய பின் அந்த போட்டோக்கள், வீடியோக்களை காட்டி தாயையும் மிரட்டி பணிய வைத்துள்ளனர்.  இந்த தகவல்களும் காவல்துறைக்கு வந்துள்ளது. சில வீடியோக்களில் காசியுடன், மிகவும் விருப்பப்பட்டு பெண்கள் இருப்பது, பேசுவது போன்ற காட்சிகளும் உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.

இதுதவிர குமரி மாவட்டத்தில் உள்ள காவல்துறை, வருவாய் துறையில் உள்ள அதிகாரிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்களின் மகன்கள், மகள்கள், குடும்பத்தினர் இணைந்து தனி வாட்ஸ்அப் குழுக்கள் வைத்துள்ளனர். இந்த வாட்ஸ்அப் குழுவில் சுஜி  இடம் பெற்றுள்ளார். வி.ஐ.பி.க்களின் பெண் வாரிசுகள் சிலர் பியூட்டி பார்லர், ஜிம் செல்லும் போது காசியையும் உடன் அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு நட்புடன் பழகி, பல வி.ஐ.பி.க்களின் படுக்கை அறை வரை காசி சென்று வந்துள்ளார்.

 இதில் பங்கேற்றுள்ள வி.ஐ.பி.க்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை என்று போலீசார் கூறி உள்ளனர். காவல்துறையில் உள்ள பலர் காசியுடன் நெருக்கமாக இருந்தவர்கள். இதனால் போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என அவர்கள் கூறி உள்ளனர்.  அதனால், வழக்கை முடிக்கும் வகையிலான வேலைகளில் போலீசார் இறங்கி உள்ளனர்.


Tags : VIPs ,Girl heirs ,heirs ,Kasi , Kasi, VIP female heirs, daughters
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மனு