×

கணவனை காதலன் உதவியுடன் கார் ஏற்றி கொன்ற மனைவி: வாட்ஸ்அப்பில் அனுப்பிய மரண வாக்குமூலத்தால் போலீசில் சிக்கினர்

வில்லியனூர்: கணவனை கார் ஏற்றி கொலை செய்ய காதலனை தூண்டிய மனைவி கைது செய்யப்பட்டார். சாவதற்கு முன் வாட்ஸ்அப்பில் கணவன் அனுப்பிய மரண வாக்குமூலத்தால் 3 பேர் போலீசில் சிக்கினார். புதுச்சேரி அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (37). தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி (28) என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டுக்கு கணவரின் நண்பரான டிரைவர் தர் என்ற அஜீத்குமார் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அதனால், புவனேஸ்வரியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை கந்தசாமி கண்டித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 14-ந் தேதி இரவு தொண்டைமாநத்தம் பகுதியில் கந்தசாமி இறந்து கிடந்தார். இதை விபத்து என வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், கந்தசாமி தனக்கு மரணவாக்குமூலம் அனுப்பியதாக ஒரு ஆடியோவை கந்தசாமி தாயார், போலீசில் செல்போனை ஒப்படைத்தார். அந்த ஆடியோவில், “அம்மா… நான் கடைசியா கொடுக்கும் வாக்குமூலம் இது. இதுக்கப்புறம் நான் உயிரோட இருப்பனான்னு தெரியாது. நாளைக்கு காலைல நான் உயிரோட இருந்துட்டா பிரச்னை இல்லை. ஒருவேளை செத்துப் போயிட்டா அதுக்குக் காரணம் புவனா, அவ அம்மா, அவ அண்ணன், அந்தப் பையன் ஸ்ரீதர் நாலுபேர்தான்” என்று கூறியுள்ளார்.

 இதையடுத்து, அந்த வீடியோவைத்து விபத்து நடந்த இடத்துக்கு போலீசார் சென்று, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது விபத்து
இல்லை; வேண்டுமென்றே காரை மோதவிட்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என தெரியவந்தது. இதன்பின், கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரி, காதலன் தர், காரை ஓட்டிய பிரவீன்குமார் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து விசாரித்தனர். அப்போது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கந்தசாமியை தீர்த்துக்கட்ட காதலன் தரிடம் புவனேஸ்வரி கூறியதும், ஸ்ரீதர் தனது நண்பர் பிரவீன்குமாருடன் காரை ஏற்றி கொன்றதும் தெரியவந்தது. போலீசாரிடம் பிரவீன்குமார் கூறுகையில், ‘நண்பர் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டதால் நானும், அவரும் சென்றுதான் கந்தசாமி மீது காரை ஏற்றிக் கொன்றோம்’ என்று தெரிவித்தார்.

அதன்பின், ஸ்ரீதர் தெரிவித்ததாவது: புவனேஸ்வரிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி கந்தசாமிக்கு தெரியவந்ததால் புவனேஸ்வரியை திட்டியதோடு, அவருடன் அடிக்கடி சண்டை போடுவார். புவனேஸ்வரியும் பதிலுக்கு சண்டை போடுவார். ஒரு கட்டத்தில் புவனேஸ்வரியை யாரிடமும் பேசக்கூடாது என கந்தசாமி டார்ச்சர் செய்தார். இதில் கடுப்பான புவனேஸ்வரி, ‘இவன் தொல்லை தாங்க முடியல. அவன் கதைய முடிச்சிவுட்ரு. அப்போதுதான் நாம் சந்தோஷமா வாழ முடியும்னு’ சொல்லுச்சி. அதுக்கப்புறம்தான் விபத்து மாதிரி செட் செய்து கொன்றோம். இவ்வாறு தர் தெரிவித்தார். இந்த வழக்கில், கந்தசாமி பேசிய ஆடியோதான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவியது குறிப்பிடத்
தக்கது.



Tags : car lover , Husband, Lover, Murder, Wife, WhatsApp, Confession of Death
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை