×

சொல்லிட்டாங்க...

நீட் தேர்வு செல்லாது என்று அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பினை, ஆட்சிக்கு வந்தவுடன் அவசர அவசரமாக ரத்து செய்ய வைத்தது பாஜ அரசு. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மாநில, யூனியன் பிரதேச அரசுகள் புகையிலை போடுவது, எச்சில் துப்புவதற்கு தடை விதித்தால் தூய்மையான, ஆரோக்கியமான இந்தியாவை
உருவாக்க முடியும். - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

இந்தியாவில் கொேரானா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மதுக்கடைகள் திறப்பும், வியாபாரமும் நோய் தொற்றை நிச்சயமாக அதிகப்படுத்தும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

வெளி மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை மீட்க, தமிழக அரசு அறிவித்த இணையதளத்தில் பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. - பாமக நிறுவனர் ராமதாஸ்



Tags : MK Stalin ,DMK , DMK leader MK Stalin
× RELATED காஞ்சிபுரத்தில் முதல்வர்...