செல்லப் பிராணிகளை கைவிடாதீர்கள்: அனுஷ்கா சர்மா உருக்கம்

கொரோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நடுத்தர மக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை பராமரிக்க முடியாமல் கைவிடத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் படத்தில் ஒரு புலம்பெயர்ந்த குடும்பத்தினர் நடந்தே சொந்த ஊருக்கே செல்லும்போது தங்களுடன் தாங்கள் வளர்க்கும் நாயை கையில் பிடித்த படியும், வாத்தை கையில் சுமந்த படியும் கொண்டு செல்கிறார்கள்.

இந்த படத்தை பகிர்ந்துள்ள அனுஷ்கா சர்மா, புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் மும்பை நாசிக் நெடுஞ்சாலையில் தங்கள் உடமைகளுடன் நடந்து செல்கின்றனர். அடுத்த முறை நீங்கள் உங்கள் சொந்த குழந்தையைப் போலவே நேசித்த உங்கள் செல்லப்பிராணியை விட்டுவிட நினைக்கும் போது இந்த படத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்  என்று கூறியுள்ளார்.

Related Stories:

>