×

நடிகரின் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மாஸ்க், சானிடைசர்

தெலுங்கில் ஹேப்பி டேஸ் படத்தில் ஹீரோவாக நடித்தவர் நிகில் சித்தார்த். இவர் டாக்டர் பல்லவி வர்மா என்பவரை காதலித்து வந்தார். கடந்த பிப்ரவரி 1ம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 16ம் தேதி வெளிநாட்டில் திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நிகில் தனது திருமணத்தை தள்ளிவைத்தார்.

ஊரடங்கு தொடர்வதால் திருமணத்தை சிம்பிளாக நடத்திட இரு வீட்டு குடும்பத்தாரும் முடிவு செய்தனர். அதன்படி ஐதராபாத்தில் நேற்று இவர்கள் திருமணம் எளிமையாக நடந்தது. இரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மாஸ்க், சானிடைசர் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த புதிய முறை திருமணத்துக்கு வந்தவர்களை கவர்ந்தது.

Tags : wedding ,actor , Actor Marriage, Mask, Sanitizer, Corona
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி