×

மதுரையில் 17ம் தேதி இறைச்சி கடைகளுக்கு தடை

மதுரை: மதுரையில் 17ம் தேதி இறைச்சி கடைகளை திறக்க, கலெக்டர் வினய் தடை விதித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் சமூக இடைவெளி இல்லாமல், பொதுமக்கள் கூட்டமாக நின்று கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள். அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வரும் 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீன் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை மீன் விற்பனையை தடை செய்யும் நோக்கில், நாளை இரவு மாட்டுத்தாவணி மற்றும் நெல்பேட்டையில் உள்ள மொத்த மீன் விற்பனை கடைகள் அனைத்தும் அடைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : meat shops ,Madurai , Madurai, meat shop, ban
× RELATED சென்னையில் வரும் 30ம் தேதி வரை இறைச்சி கடைகள் மூடல்: மாநகராட்சி அறிவிப்பு