×

மனித குல வரலாற்றில் மிகப் பெரிய சவாலான பேரிடர் கொரோனா; பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி உரை

சென்னை: கொரோனா பாதிப்பால் தொழில் நிறுவனங்கள் முடங்கியது குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் உரையாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணியில் அரசின் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக தொழில்துறையினர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெருமளவில் நிதி வழங்கி வருவதற்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் மக்கள் வாழ்வாதாரத்துக்கான பல்வேறு அடிப்படை உதவிகளையும் தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதன் அடுத்த கட்டமாக ஊரடங்கு தளர்வு குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்று தெரிவித்த அவர் மேலும் உரையாற்றியதாவது:

* ஊரடங்கு காலத்திலும் கூட தொழில் நிறுவனங்கள் தங்களது முக்கியமான தொழில் இயந்திரங்களுக்கு பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள தகுந்த அனுமதியினை வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம் தான்.

* அவசர காலத்தில் தேவைப்படும் பொருட்கள் உற்பத்தி 10 வகையான தொடர் செயல்பாட்டு நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

* மனித குல வரலாற்றில் மிகப் பெரிய சவாலான பேரிடர் கொரோனா.

* கொரோனா தடுப்பு பணியில் சுமார் 1500 நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் அனுப்பி வருகின்றன.

*  பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றன.

* ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக அரசு அலுவலர்கள், சுகாதார வல்லுநர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

* சூழ்நிலையை பொறுத்து அரசு படிப்படியாக மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும்.

*  வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 1500 சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன.

* சென்னையை தவிர்த்து பிற இடங்களில் உள்ள நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

*  அனைத்து தொழிற்சாலைகளும் அரசு அறிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.

Tags : Chief Minister ,Coroner ,public , Barter, Corona, CM Palanisamy, Text
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...