×

தமிழகத்தில் 50% அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டும்... இனி வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 50 சதவீத ஊழியர்களுடன் சனிக்கிழமைகளும் இனி அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது இன்னும் இரண்டு நாட்களில் முடியவடைய உள்ளது. இதை தொடர்ந்தும் 4ம் கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்துடன் மே 17ம் தேதிக்கு முன்பு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 50 சதவீத ஊழியர்களுடன் 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் வாரத்தின் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். அலுவலகம் பணிக்கு வராத ஊழியர்கள் மின்னணு முறையில் தொடர்பில் இருக்க வேண்டும். தேவையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,government employees ,government ,Government offices , Government Employees, Work, 6 Days, Government Offices, Operating, Government of Tamil Nadu
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து