×

மருத்துவமனைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது: கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில்-
 நேற்றைய தினம் மருத்துவ நிபுணர் குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தில் நிறைய பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.  மருத்துவமனை முழுவதும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு வழிமுறைகள் உள்ளடக்கிய நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

*அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா குறித்து அடிப்படை பயிற்சி அளித்திருக்க வேண்டும்.

*மருத்துவ பணியாளர்கள் அணிந்திருக்கும் மருத்துவ உபகரணங்கள் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும்.

* கொரோனா தொற்று அல்லது கொரோனா அறிகுறியால் இறந்தவர்களின் உடலை கையாளும் விதம், மருத்துவ உபகரணங்களை அறிந்திருக்க வேண்டும்.

* மருத்துவமனையின் உணவகம் உள்பட அனைத்து இடங்களிலும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

* அனைத்து வாயில்களிலும் சோப் மற்றும் கைகழுவ வசதியாக குழாய் நீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

* மருத்துவமனைக்கு வரக்கூடிய அனைவருக்கும் கண்டிப்பாக முகக்கவசம் வழங்க வேண்டும்.

* தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் இருக்க வேண்டும்; அதற்கென தனிப்பாதை இருக்க வேண்டும்.

* மருத்துவமனை முழுவதும் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

* எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.

* நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், கழிவறைகளை சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்து கழிவுகளை அரசு அறிவுரைப்படி அகற்றப்பட வேண்டும்.

* அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் தனிநபர் பாதுகாப்பு உடையை அணிந்த பின்னரே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்ட தமிழக அரசு, இதனிடையே  மருத்துவமனைகளில் பின்பற்றக் கூடிய விரிவான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


Tags : Visitors ,hospital ,spread ,government ,Tamil Nadu , Hospitals, Corona, Ethics, Government of Tamil Nadu
× RELATED தீவுத்திடலில் 70 நாள் நடந்த சுற்றுலா...