×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாநிலமாக விளங்கும் சிக்கிம் : மாநில அரசின் சிறப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைளுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

சிக்கிம் : இந்தியாவில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாநிலமாக சிக்கிம் விளங்கி வருகிறது.அங்கு கொரோனா பாதிப்பு ஏற்படாததற்கு மாநில அரசின் சிறப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைளே காரணம் என பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை நேற்று 78 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எந்தவொரு மருந்தும் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாநிலமாக சிக்கிம் விளங்கி வருகிறது. இதுகுறித்துப் பேசியுள்ள அம்மாநில நிர்வாக அதிகாரிகள், சிக்கிமில் மார்ச் 5ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்டனர். புகழ்பெற்ற நாதுலாவுக்கு வருகைக்கான அனுமதியை மறுத்தது, வெளி நாட்டுப் பயணிகளுக்கான இன்னர் லைன் பெர்மிட்டுகளை தடை செய்தது போன்றவை இதுவரை எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளாகும். முதல்வர் பிரேம்சிங் தமங் தலைமையிலுள்ள சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா ஆட்சி நாதுலா எல்லை அருகே சீன-இந்தியா வர்த்தகத்தையும் தடை செய்தது. இதுபோன்ற பல சிறப்பான நடவடிக்கைகள் மூலமே சிக்கிம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : Sikkim ,state ,India ,state government , India, corona, vulnerability, Sikkim, control, action, praise
× RELATED 102 தொகுதிகளில் முதற்கட்ட...