×

அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு 4 ஆயுர்வேத மருந்துகளை அளித்து பரிசோதனை : மத்திய அரசு

டெல்லி : அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை அளித்து சோதனை செய்ய இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை நேற்று 78 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எந்தவொரு மருந்தும் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் அறிகுறிகளுக்கான மருந்துகளும், நோய் எதிர்ப்புச்சக்தி மருந்துகளும், ஆரோக்கியமான உணவும்தான் வழங்கப்பட்டு, கொரோனா நோயாளிகள் குணம் அடைந்து வருகின்றனர்.கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா உருமாறிக்கொண்டே இருப்பதால் தடுப்பூசி கண்டறிவது மிகுந்த சவாலாகவே உள்ளது.
I
இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை அளித்து சோதனை செய்ய இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் நேற்று தன்னுடைய ட்விட்டர் பதிவில், கொரோனா தொற்றுக்கு எதிராக 4 ஆயுர்வேத மருந்து வகைகளை ஆயுஷ் அமைச்சகமும் இந்திய அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக உருவாக்கி வருகிறது. அந்த 4 மருந்துகளும் கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு வாரத்திற்குள் பரிசோதிக்கப்படும்.  கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு நமது பாரம்பரியமிக்க மருத்துவ முறைவழிகாட்டும், என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

Tags : coronavirus patients , Corona, Prevention, Medicine, Ayurveda, Testing, Federal Government
× RELATED ஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா...