×

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!!

டெல்லி : கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சுடன் பிரதமர் மோடி காணொலி மூலமாக கலந்துரையாடினார்.மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார். சீனா மற்றும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, தனது அறக்கட்டளை மூலம் 700 கோடி ரூபாய் வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பில்கேட்ஸ் உடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் பேசினார்.

அப்போது பில்கேட்சின் அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா துயர் துடைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தி உள்ள தாக்கம், வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஒருங்கிணைந்து வைரசுக்கு எதிராக போராடுவது குறித்து இருவரும் விவாதித்தனர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, தனிநபர் இடைவெளி போன்ற பிரச்சினைகளையும் மோடி பில்கேட்சுடன் விவாதித்தார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் விவாதம் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலில் பில்கேட்ஸ் அறக்கட்டளையின் இணை தலைவரான மெலிந்தா கேட்சும் பங்கேற்றார்.



Tags : Modi ,Microsoft ,Bill Ketch ,founder , Corona, Antivirus, Prevention, Medicine, Microsoft, Founder, Bill Gates, Prime Minister Modi, Discussion
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...