×

கொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்குவதற்கு ACE 2 புரோட்டீன் தான் காரணம் : ஆராய்ச்சியாளர்கள் தகவல்

மும்பை : கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை அதிகமாக தாக்குகிறது என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. உலக அளவில் கொரோனாவில் பெண்கள் ஏன் குறைந்த எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளார்கள் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 லட்சத்திற்கும் மக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பிலும் இறப்பிலும் 60%க்கு மேற்பட்டோர் ஆண்களாகவே இருக்கின்றனர். இதற்கான விடைகளை தேடிய ஆராய்ச்சியாளர்களுக்கு சில ஆச்சரிய தகவல்கள் கிடைத்துள்ளனர்.

பெண்களிடம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் அவர்களை கொரோனாவிடம் இருந்து காக்கும் வேலையை செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதில்லை. கொரோனா வைரஸ் ACE 2(angiotensin-converting enzyme 2) புரோட்டீனை பயன்படுத்திய மனித உடலில் உள்ள செல்களை தாக்குகிறது. இது பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருப்பதால் இயல்பாகவே அவர்கள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஐரோப்பிய இதய நோய் பத்திரிக்கை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவுகள். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ACE 2 புரோட்டீனை பாதிப்பதால் கொரோனா வைரஸுக்கு பெண்களிடம் இயல்பாகவே ஒரு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.

TLR எனப்படும் ஜீன் (டால் லைக் ரிசப்டார்ஸ்) மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த TLR ஜீன் எக்ஸ் குரோமோசோமில் அதிகம் காணப்படுகிறது. ஆண்களுக்கு ஒரு எக்ஸ் குரோமோசோம் உடனும் பெண்களுக்கு 2 எக்ஸ் குரோமோசோம் உடனும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது. மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 68 பேரிடம் ஆராய்ச்சி செய்யப்பட்ட முடிவுகளின் படி, நெகடிவ் ரிசல்ட் உள்ள பெண்களிடம் கொரோனா கிருமிகள் 4 நாட்களில் முழுவதும் மறைகிறது. ஆனால் ஆண்களிடம் இருந்து மறைய 6 நாட்கள் ஆகிறது என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Tags : men ,women ,researchers , Corona, Virus, Women, Men, ACE 2, Protein, Researchers, information
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்