×

மீண்டும் ஒரு ரவுண்டு வருமோ என பீதி: வுகான் மக்கள் 1.10 கோடி பேருக்கும் பரிசோதனை: சீனா முடிவு

பீஜிங்: வுகான் நகரில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், இங்குள்ள 1.10 கோடி பேருக்கும் வைரஸ் பரிசோதனை நடத்தி விடும் முடிவுக்கு சீனா வந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் 82,919 பேர் பாதித்துள்ளனர். இதுவரையில் 4,633 பேர் பலியாகி உள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, கடந்த இங்கு ஒரு மாதமாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த ஞாயிறு, திங்கட் கிழமைகளில் வுகான் நகரில் ஒரே குடியிருப்பில் உள்ள 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா மீண்டும் பரவுமோ என்ற அச்சம், சீன அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வுகானில் வாழும் 1.10 கோடி மக்களுக்கும் அடுத்த 10 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும் இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கவனித்து வருகிறது. இதனிடையே, பீஜிங்கில் வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை டிரோன், ஏர் பலூன்கள், பாரா கிளைடர்கள் ஆகியவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஒத்தி வைக்கப்பட்ட முக்கிய அரசியல் கூட்டம் தற்போது நடைபெற உள்ளதால் இத்தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.



Tags : coming ,Panic ,round ,population ,Wukan ,China , Wukan People, China, Corona
× RELATED அரசுப் பள்ளிகளில் வரும்...