×

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... அண்ணன் குடும்பத்தை 25 கி.மீ. வண்டியில் இழுத்து சென்ற தம்பி

* ஒரு பக்கம் காளை; மறுபக்கம் மனிதன்

இந்தூர்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கிய  ஊரடங்கு, இன்று வரை நீடிக்கிறது. அனைத்து விதமான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டதால், பல்வேறு மாநிலங்களுக்கும், சொந்த மாநிலத்திலேயே வேறு மாவட்டங்களுக்கும் வேலைக்காக சென்ற லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தற்போது பல நூறு கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக நடந்தே சொந்த ஊர் செல்கின்றனர். இந்த காட்சிகள் மிகவும் பரிதாபமாக இருக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராகுல். இவர் இதே மாநிலத்தில் உள்ள மோவ் பகுதியில் தனது தந்தை, தங்கை மற்றும் அண்ணன், அண்ணியுடன் தங்கி தினக்கூலி வேலை செய்து வந்தார்.

ஊரடங்கு காரணமாக வேலை கிடைக்காமல், குடும்பத்துடன் பட்டினியில் தவித்தார். கையில் பணம் இல்லாததால், தன்னிடம் இருந்த மாட்டு வண்டியின் 2 காளைகளில் ஒன்றை ரூ.5 ஆயிரத்துக்கு விற்றார். சாதாரணமாக ரூ.15 ஆயிரத்துக்கு விற்க வேண்டிய காளையை, கொரோனா ஊரடங்கு காரணமாக ரூ.5 ஆயிரத்துக்கு மட்டுமே அவரால் விற்க முடிந்தது. இந்த பணம் செலவு செய்து தீர்ந்து விட்டதால், இந்தூரில் உள்ள தனது சொந்த ஊரான நயதா முன்ட்லாவுக்கு திரும்ப அவர் முடிவு செய்தார்.

 தனது குடும்பத்துடன் மாட்டு வண்டியில் பயணத்தை தொடங்கினார். எஞ்சியிருந்த ஒரு காளையை வண்டியின் ஒரு பக்கம் பூட்டிய அவர், மற்றொரு பக்கத்தை தனது தோளில் சுமந்தபடி வண்டியை இழக்கத் தொடங்கினார்.  ராகுலின் அண்ணனும், அண்ணியும் நீண்ட தூரம் நடந்தே வந்ததால் மிகுந்த சோர்ந்தனர். எனவே, அவர்களை வண்டியில் அமர வைத்து 25 கி.மீ. தூரத்துக்கு ராகுல் இழத்துச் சென்றார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


Tags : Muttukkuttu Muttu , Corona, curfew, brother-in-law
× RELATED சொத்துக்குவிப்பு வழக்கு; மாஜி ஐஜியின்...