×

திருமழிசை சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கிய வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி

தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சி பகுதியை சேர்ந்த 31 வயது காய்கறி வியாபாரி, அப்பகுதியில் வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர், நேற்று காலை திருமழிசை தற்காலிக மார்க்கெட்டுக்கு சென்று, காய்கறி வாங்கிக்கொண்டு சக வியாபாரிகளுடன் சரக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். தாம்பரம் பைபாஸ் சாலையில் சென்றபோது, இவரது வாகனம் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த அவரை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதேபோல், செம்பாக்கம் நகராட்சி, காமராஜபுரம், வீர மாமுனிவர் தெரு பகுதியில் 34 வயது காய்கறி வியாபாரி, சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வந்த பல்லாவரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலரான 62 வயது நபர், செம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த மாடம்பாக்கம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான 45 வயது நபர், குரோம்பேட்டை ராதா நகரில் 31 வயது ஐடி ஊழியர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 150 பணியாளர்கள் நியமனம்: துரைப்பாக்கம் கண்ணகி நகர் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணியை ெகாரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்த பகுதியில் 27 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இங்குள்ள மேலும் யாருக்காவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என கண்டறிய 150 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், 4 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தது.  இந்த பகுதியில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருவதையும், கடைகளில் இடைவெளியுடன் நின்று பொருட்களை வாங்குவதையும் கண்காணிக்க சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Coroner ,dealer ,accident Coroner , Tirumalicai, merchants, Corona
× RELATED உளுந்து வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி