×

சில்லி பாயிண்ட்...

* நீண்ட கால லட்சியங்கள் மனரீதியாக நெருக்கடியை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளதால் குறுகிய கால இலக்குகளையே விரும்புகிறேன்… என்று  இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
* சண்டிகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹாக்கி ஜாம்பவான் பல்பிர் சிங் சீனியருக்கு மேலும் 2 முறை மாரடைப்பு ஏற்பட்டதால்  கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* கொரோனா பாதிப்பால் விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், எம்.எஸ்.டோனி மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்  பிடிப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்று முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
* ஸ்டேடியங்களில் ஆரவார கூச்சலிட்டு ஊக்குவிக்கும் ரசிகர்கள் இல்லாமல் திறமையை வெளிப்படுத்துவது தடகள வீரர், வீராங்கனைகளுக்கு மிகப்  பெரிய சவாலாக இருக்கும் என்று இந்தியாவின் அதிவேக வீரர் அமியா குமார் மாலிக் கூறியுள்ளார். இவர் கடந்த ஆண்டு ராஞ்சியில் நடந்த 100 மீட்டர்  ஓட்டத்தில் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றவர்.
* எந்தவிதமான நெருக்கடியான சூழ்நிலையிலும் அதற்குரிய தீர்வை மிகச் சரியாகக் கணிக்கும் உள்ளுணர்வே டோனியின் வலிமை என்று தென்  ஆப்ரிக்க நட்சத்திரம் டு பிளெஸ்ஸி பாராட்டி உள்ளார்.
* பார்முலா 1 கார் பந்தயத்தில் ரெனால்ட் அணிக்காக திறமையை வெளிப்படுத்தி வந்த டேனியல் ரிக்சியார்டோ, 2021 சீசனில் மெக்லாரென்  அணிக்காக ஒப்பந்தமாகி உள்ளார்.
* வெஸ்ட் இண்டீசில் மே 22ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள வின்சி பிரிமியர் லீக் டி10 கிரிக்கெட் தொடரில், பந்துவீச்சாளர்கள் எச்சிலைத் தடவி  பந்தை பளபளப்பாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
* துப்பாக்கிசுடுதல் நட்சத்திரங்கள் அஞ்சும் மோத்கில் பெயரை கேல் ரத்னா விருதுக்கும், ஜஸ்பால் ராணா பெயரை துரோணாச்சாரியார் விருதுக்கும்  இந்திய துப்பாக்கிசுடுதல் சங்கம் பரிந்துரைத்துள்ளது.


Tags : Rohit Sharma ,Indian , Indian cricket star, Rohit Sharma
× RELATED ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்த ரோகித்: பயிற்சி முகாமில் நெகிழ்ச்சி