×

ஊட்டியில் மலர் கண்காட்சி ரத்து

ஊட்டி: ஊட்டியில் ஆண்டுதோறும் 5 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படும். கண்காட்சிக்காக கடந்த டிசம்பர் மாதத்திலேயே 5 லட்சம் மலர் செடிகள்  நடவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது, 35 ஆயிரம் தொட்டிகளில் லில்லியம், டேலியா, இன்காமேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, பேன்சி,  பெட்டூனியா உள்ளிட்ட மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இந்தாண்டு, 124வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி 5 நாள் நடப்பதாக இருந்தது. ஆனால்,  ஊரடங்கு காரணமாக கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், மலர்களை மக்கள் காணும் வகையில் ஒரு குறும்படம் மற்றும் புகைப்பட  ஆல்பமாக தோட்டக்கலை தயாரித்து வருகிறது. ஓரிரு நாட்களில் அது வெளியிடப்படும்.


Tags : Flower Exhibition ,Ooty , Flower Exhibition canceled, Ooty
× RELATED 22ம் தேதி வரை நடக்கிறது ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி மே 17ம் தேதி துவக்கம்