×

சிறுமி குடும்பத்துக்கு நிவாரணம்: பாஜக தலைவர் முருகன்,தேமுதிக பிரேமலதா மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை,  மே 15: விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தில் அதிமுக பிரமுகர்களால் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சிறுமி  ஜெயயின் வீட்டுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகன், முன்னாள் எம்எல்ஏ கலிவரதன் உள்ளிட்ட 10 பேர் நேரில் சென்று அவரது  பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.  இதேபோல தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன்  உள்ளிட்ட 6 பேர் சென்று பார்த்தனர். அப்போது அவர் ஜெயயின் பெற்ேறாரிடம் ₹1 லட்சம் வழங்கினார். மேலும் சிறுமியை எரித்தவர்களை  என்கவுன்டரில் போட வேண்டும் என பேட்டியளித்தார்.

 இதையடுத்த பாஜ தலைவர் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் மற்றும் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  மோகன்ராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு உள்ளிட்ட 8 பேர் மீதும், மனிதநேய  மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் உள்ளிட்ட 9 பேர் மீதும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ்  உள்ளிட்ட 9 பேர் மீதும் 144 தடை உத்தரவை மீறி கொரோனா வைரஸ் தொற்று பரவும் வகையில் கூட்டமாக சென்றதாக திருவெண்ணெய்நல்லூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : Murugan ,BJP ,Temutika Premalatha Little Girl ,Temuthika Premalatha , Little girl, relief, BJP, Murugan, dmdk, Premalatha
× RELATED அமைச்சர்கள் பேசக்கூடாது என்று பாஜ...