×

கொரோனா சிக்கன நடவடிக்கை 30% சம்பளத்தை குறைத்து கொண்டார் ஜனாதிபதி

புதுடெல்லி: கொரோனா தொற்றால் நாட்டில் மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிக்கட்ட, மத்திய அரசு பல்வேறு சிக்கன  நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் டிஏ குறைக்கப்பட்டுள்ளது. சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர், எம்பி.க்கள்  சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. எம்பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த பாதிப்பில்  தனது பங்களிப்பையும் வழங்குவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சம்பளத்தை 30 சதவீதம் குறைத்து கொள்வதாக நேற்று அறிவித்தார்.  மேலும், ஜனாதிபதி மாளிகையில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை யும் எடுத்துள்ளார். அதன் விவரம்:
* தனது உள்நாட்டு பயணங்கள், நிகழ்ச்சிகள் குறைப்பு.
* விருந்தினர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்.
* வரவேற்பு ஏற்பாடு செலவுகள் கட்டுப்படுத்தப்படும்.
* விருந்து உணவு பட்டியல் குறைக்கப்படும்.
* ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு பணிகள் குறைக்கப்படும்
* காகித பயன்பாடு குறைக்கப்படும்.

லிமோசைன் கார்
முக்கிய விருந்தினர்கள் வருகையின் போது அவர்களை வரவேற்க ஜனாதிபதி மாளிகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லிமோசைன் கார்கள்  பயன்படுத்தப்படுகின்றன. இந்த காரை வாங்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Tags : Corona ,President , Corona, salary, president, curfew
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...