×

டிரைவர், சலவை தொழிலாளர் உள்பட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 4,634 பேருக்கு நல உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர், திருநங்கை, சலவைத் தொழிலாளர், முடி திருத்துவோர், சிறுகுறு வணிகர்கள் என 4634 பேருக்கு  நலஉதவிகளைஉதயநிதி ஸ்டாலின் வழங்கினார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  உத்தரவின்பேரில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை விருகம்பாக்கம் ஆட்டோ  ஓட்டுநர்கள், திருநங்கைகள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்து வோர், சிறுகுறு வணிகர்கள் உள்ளிட்ட 3024 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு  உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது‌.

விழாவில், திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 3024 பேருக்கு 20 வகையான மளிகைப் பொருட்கள், 5  கிலோ அரிசி, முகக் கவசம் உள்ளிட்ட உதவி பொருட்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் சைதாப்பேட்டை  எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன், மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இதேபோல் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 1000 பயனாளிகளுக்கு உதயநிதி ஸ்டாலின்  உதவிப் பொருட்களை வழங்கினார்.

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசி, 10 கிலோ காய்கறி,  மளிகை, ஒரு சானிடைசர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 3 நிகழ்ச்சிகளில் 4634 பேருக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.


Tags : laundry workers ,Udayanidhi Stalin , Driver, Laundry Worker, Curfew, Udayanidhi Stalin
× RELATED சலவை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்