×

வாழ்வாதாரம் கிடைக்க வாய்ப்பில்லாத தொழிலாளர்களுக்கு சிறப்பு: நிதியுதவி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 50 நாட்களாக திருமணம் சாரந்த தொழில் செய்வோர் பணியின்றி தவித்து  வருகின்றனர். பலரது குடும்பங்களில் உணவுக்குக் கூட வழியில்லை. அவர்களுக்கு அரசிடமிருந்து எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை. அதேபோல், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இருமுறை தலா 1000 வீதம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 50 நாட்களுக்கும் மேலாக  வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. எனவே, திருமணம் சார்ந்த தொழில்களைச் செய்பவர்களுக்கும், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும்  அவர்களின் சூழலை கருத்தில் கொண்டு  அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : government ,Ramadas ,Tamil Nadu , Corona, Workers, Finance, Government of Tamil Nadu, Ramadas
× RELATED ஓய்வுக்கு பிறகு மீண்டும் பிரசாரம்: ராமதாஸ் கடிதம்