×

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தலைமைச் செயலகத்தில் கேன்டீன் திறக்கலாம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: விதிமுறைகளுக்கு உட்பட்டு, தலைமைச் செயலகத்தில் உள்ள கேன்டீன்கள் திறக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.  இது குறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் கூட்டுறவு கேன்டீன்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.  ஆனால், உணவு, டீ, காபி ஆகியவை பார்சல் மூலமே வழங்கப்படும். டீ, காபி ஆகியவை டம்ளரில் வழங்கக் கூடாது. உணவகம் திறக்கக் கூடாது.  ஆனால் பார்சலில் உணவு வழங்க அனுமதி உண்டு. விற்பனை செய்யும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

சமையல் செய்யும் இடங்களில் சுகாதாரங்களை கடைபிடிக்க வேண்டும். ஊழியர்கள் அனைவரும் மாஸ்க், கையுறை, தலைக்கவசம் அணிந்திருக்க  வேண்டும். உணவு வழங்கும் இடத்தில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Headquarters ,Corona ,Government of Tamil Nadu , Corona, Chief Secretariat, Canteen, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...