×

டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தது சிறப்பு ரயில்; 1,100 பேர் முகாம்கள் மற்றும் ஹோட்டல்களில் தங்கவைப்பு..நாளை கொரோனா பரிசோதனை

சென்னை: டெல்லியில் இருந்து சிறப்பு ரயிலில் 1,100 பேர் சென்னை வந்தனர். டெல்லியில் இருந்து வந்தவர்கள் முகாம்கள் மற்றும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் அமலில் உள்ள பொதுமுடக்கத்தின் காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, தலைநகர் டெல்லியிலிருந்து சென்னை, பெங்களூரு, அகமதாபாத், மும்பை, ஹௌரா உள்ளிட்ட நாட்டின் முக்கிய 15 நகரங்களுக்கு மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா வந்த பக்தர்கள் ஆகியோரை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, அந்தந்த மாநில அரசுகளிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை சொந்த ஊர்களுக்கு ரயில்கள், பேருந்துகள் மூலம் அனுப்பி வருகிறது.

இந்நிலையில் டெல்லி இருந்து 1,100 தமிழர்களுடன் சிறப்பு ரயில் நேற்று புறப்பட்டது. இந்த சிறப்பு ரயில் தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளது. இவர்களை பரிசோதனை செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களை பரிசோதனை செய்ய  2 டாக்டர்கள் மற்றும் சில மருந்தாளுநர்கள் தயாராக உள்ளனர். இவர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. டெல்லியில் இருந்து வந்தவர்கள் முகாம்கள் மற்றும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

Tags : Chennai ,Delhi ,camps ,hotels , Delhi, Chennai, Special Train, Camps, Corona Inspection
× RELATED 88 முகாம்களில் நடக்கிறது 10ம் வகுப்பு...