×

வைகை அணை முன்பு தடுப்பணை நீரில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை

ஆண்டிபட்டி: வைகை அணை முன்பு உள்ள தடுப்பணை தண்ணீரில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. நீர்வரத்து இல்லாததால் அணையில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 43.08 அடியாக உள்ளது. அணையின் முன்புறம் உள்ள தடுப்பணை அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் மதுரை நகர் மற்றும் சேடபட்டி பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது. அணையிலிருந்து குடிநீருக்காக தினமும் 60 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

தற்போது தடுப்பணையில் குடிநீருக்காக தேக்கி வைத்துள்ள தண்ணீரில் அதிகளவில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன. மேலும் இப்பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளர்கள் ஏராளமானோர் தடுப்பணையில் துணிகளை துவைத்து வருகின்றனர். இதனால் தடுப்பணை நீர் கடுமையாக மாசடைந்ததுள்ளதுால், அதில் தேங்கியுள்ள தண்ணீரை முழுமையாக சுத்திகரிக்க முடியாத நிலை உள்ளது. எனவே குடிநீருக்காக தேக்கப்படும் தண்ணீர் மாசுபடுவதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vaigai Dam , Vaigai Dam, Aerial Lotus
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்