×

ஊரடங்கு எதிரொலி; தமிழகத்தில் வாகன வரி செலுத்த ஜுன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஆண்டு வரி, காலாண்டுக்கான அனைத்து வகை வாகன வரியை செலுத்த ஜுன் 30 வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டு வரிக்காக காலக்கெடு ஏப்ரல் 10-லிருந்து ஜுன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலாண்டு வரி காலக்கெடு மே 15-லிருந்து ஜுன் 30-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொது முடக்கம் காரணமாக மின்சார கட்டணம், வாகன வரி, வருமான வரி எனக் கட்டணங்கள், வரிகளைச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் இந்த ஊரடங்கு பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாநிலங்கள் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.97,100 கோடி வருவாய் இழப்பை சந்தித்திருக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 26,962 கோடி, வாட் வரி வருவாய் ரூ.17,895 கோடி, கலால் வரி வருவாய் ரூ.13,785 கோடி, பத்திரப் பதிவு வருவாய் ரூ.11,397 கோடி, வாகன வரி வருவாய் ரூ.6,055 கோடி, மின்சார வரி ரூ.3, 464 கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.17,595 கோடி ஆகியவை அடங்கும். ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், 2வது காலாண்டில் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில் சில உதவிகளைச் செய்து வருகிறது.

இந்நிலையில் பேருந்து, சரக்கு வாகனங்களுக்கு வாகன வரி செலுத்த ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆண்டு வரி, காலாண்டுக்கான வரி என அனைத்து வகையான வாகன வரியை செலுத்த ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வரிக்கு காலக்கெடு ஏப்ரல் 10-ல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும், காலாண்டு வரிக்கு காலக்கெடு மே 15-ல் இருந்து ஜூன் 30 நீட்டிக்கப்பட்டு உள்ளது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரி செலுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில்கொண்டு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags : Tamil Nadu , Curfew, Vehicle Tax, Leave, Extension, Govt
× RELATED அதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலி:...