பழ விற்பனை நிலையமான திருவில்லி. பஸ் ஸ்டாண்ட்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் பழங்கள் விற்பனை செய்யும் நிலையமாக மாறி உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியே கடைபிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். திருவில்லிபுத்தூரில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் வியாபாரிகள் கலந்து ஆலோசித்து கடைகளில் கூட்டம் சேராத வகையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்தனர். அந்த வகையில், திருவில்லிபுத்தூர் மேட்டு தெரு மற்றும் திருவிகா பள்ளி அருகில் காய்கறி விற்பனை நிலையம், மங்காபுரம் பள்ளி மைதானத்தில் இறைச்சி, மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு திருவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக பஸ் ஸ்டாண்ட், பழங்கள் விற்பனை செய்யும் நிலையமாக மாறியுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு பஸ்கள் இயங்கும் போது பழக்கடைகள் மாற்றம் செய்யப்படும். அதுவரை பஸ் ஸ்டாண்டில் பழக்கடைகள் செயல்படும்’ என்றார்.

Related Stories:

>