×

தேனியில் கால்வாய் சீரமைப்பு

தேனி: தமிழ்முரசு நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக ஊரடங்கின் தளர்வு வழங்கப்பட்ட பின்னர் தேனியில் முதல் பணியாக குறிஞ்சி நகர் பகுதியில் கால்வாய் சீரமைபபு பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. தேனியில் குறிஞ்சிநகர், காந்திநகர் பகுதியில் சாக்கடை நீர் கடந்து செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பது, மக்கள் கொசுக்கடியால் அவதிப்படுவது, நோய் தொற்று பரவும் அபாயம் குறித்த செய்தி படத்துடன் கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் தமிழ்முரசு இதழில் வெளியானது. செய்தி வெளியான மறுநாளே தேனி நகராட்சி கமிஷனர், பொறியாளர், நகராட்சி சுகாதார அலுவலர் உட்பட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அதிகாரிகள் ஆய்வை தொடர்ந்து சாக்கடையை முழுமையாக துார்வாறி சீரமைக்க நடவடிக்கைகளை எடுத்தனர்.

இப்பணிகளை தொடங்கும் முன்னர், கொரோனா ஊரடங்கு அமல்படு–்த்தப்பட்டது. இதனால் பணிகள் தொடங்கிய நிலையில் தேக்கமடைந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், தேக்கமடைந்திருந்த பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றன. தேனி நகராட்சியில் குறிஞ்சி நகர் பகுதிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, முதல் பணியாக இங்கு கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்து முழுமையாக கழிவுநீர் கால்வாய் கட்டி முடிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Theni, Canal Alignment
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...