×

தேனியில் ஒரு கிராமத்தில் 12 பேருக்கு கொரோனா : ஒன்றாக சேர்ந்து தாயம் விளையாடியதால் நேரிட்ட பரிதாபம்

தேனி : கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்பில் இருந்தவர் தாயம் விளையாடியதால் மற்றவர்களுக்கும் பரவிய கொரோனா வைரஸ். ஒரே கிராமத்தில் 12 பேருக்கு உறுதியானது அதிர்ச்சியடைய செய்துள்ளது. தேனி மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கோயம்பேட்டுக்கு வந்து போயுள்ளார். கோயம்பேடுக்கு யாரெல்லாம் வந்தார்கள் என்பதை கண்டறிந்து சோதனைகள் நடத்தப்பட்டபோது, இவரும் சிக்கினார்.

இதையடுத்து, உடனடியாக டெஸ்ட் எடுக்கப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. இவருக்கு உறுதியாகவும் இவருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்று அந்த ஆய்வு நடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 200 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களை சோதித்ததில் 12 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

 இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் அனைவரும்ஒன்றாக  சேர்ந்து தாயம் விளையாடி உள்ளனர். மேலும் கொரோனா பாதித்த லாரி டிரைவர் குடும்பத்தினர், அருகே உள்ள குடும்பத்தினருடன் தாயம் விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதுவரை பாதித்த 12 பேர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,village ,Theni Corona ,Village Theni , Theni, Corona, Thayam, awful
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...