×

கோயம்பேடு வியாபாரிகள் மூலம் கொரோனா பரவியதா?.. முதல்வர் பேச்சு தவறு: வணிகர் சங்க பேரவை

சென்னை: கொரோனா பரவல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன்; கோயம்பேடு வியாபாரிகளிடம் இருந்து பிற மாவட்டங்களுக்கு கொரோனா பரவியதாக பேசியது தவறு என்றார். கொரோனாவால் தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றியுள்ள சந்தையை மீண்டும் கோயம்பேட்டிலேயே செயல்பட வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர்; ஆன்லைன் விற்பனையை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். உள்நாட்டு பொருட்களை வாங்குமாறு பிரதமர் மோடி பேசியதை வரவேற்ற வெள்ளையன் இந்த நேரத்தில் கோக், பெப்சி, உள்ளிட்ட குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Tags : traders ,Corona ,Coimbatore , Coimbatore Traders, Corona, Merchants Association
× RELATED மதுரை மாட்டுத்தாவணி மார்கெட்...