×

கொரோனா தடுப்புக்கான ரெம்டிசிவியர் மருந்தைத் தயாரிக்க 4 இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி!! : 127 நாடுகளுக்கு மருந்தை ஏற்றுமதி செய்கிறது

டெல்லி :ரெம்டெசிவர் மருந்தைத் தயாரிக்க சிப்லா உள்ளிட்ட 4 இந்திய நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன.அமெரிக்காவில் கிலியட் மருந்து நிறுவனத்தின் தயாரிப்பான ரெம்டிசிவியர் மருந்து, முதல் ஐந்து நாட்களில் இருந்து பத்து நாட்களில் கொரோனா வைரஸுக்கு எதிராக நல்ல பலன் அளிக்கிறது என்று மூன்று கட்ட ஆய்வில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவியர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மருந்து தயாரிப்பிற்கான உரிமத்தை வைத்திருந்த கிலியட் சயின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம், 4 இந்திய நிறுவனங்களுக்கு இந்த மருந்தை தயாரிக்க உரிமம் வழங்கியுள்ளது.இவை தவிர பாகிஸ்தானில் இருக்கும் பெரோஸ்சன்ஸ் லேபாரட்டரிஸ், பென்சில்வேனியாவில் இருக்கும் மிலன் ஆகிய நிறுவனங்களுக்கும் கிலியட் சயின்ஸ் உரிமம் அளித்துள்ளது. சிப்லா லிமிடெட், ஹெட்டெரோ லேப்ஸ் லிமிடெட், ஜூபிலண்ட் லைப் சயின்சஸ் மற்றும் மைலன் ஆகிய இந்திய நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் ஈடுபடும். இந்த ஐந்து நிறுவனங்கள் தயாரிக்கும் ரெம்டிசிவியர் மருந்து உலகின் 127 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.இந்த ஐந்து நிறுவனங்களும் இந்த மருந்துக்கான விலையை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கிலியட் தெரிவித்துள்ளது.தொழில்நுட்ப ரீதியாக இந்த மருந்தை தயாரிப்பதற்கான வழிமுறைகளை இந்த ஐந்து நிறுவனங்களுக்கும் கிலியட் அளித்துள்ளது.

Tags : India ,companies ,countries , Corona, Prevention, RemedyCircle, Drug, Indian Companies, Permits, Export
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...