×

தனி மனித இடைவெளியால் நிச்சயம் நஷ்டம் ஏற்படும்: ஆம்னி பேருந்து கட்டணத்தை 2 மடங்காக உயர்த்த முடிவு...ஊரடங்கு முடிந்தப்பின் அமல்

சென்னை: நாடு முழுவதும் 2வது கட்ட ஊரடங்கு வருகிற 17ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ்  மூலம் ஆலோசனை நடத்தி மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி, 5வது முறையாக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நாட்டு  மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். 4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே  முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றார்.

இருப்பினும், கடந்த 3-ம் கட்ட ஊரடங்கு நீட்டித்தப்போது, சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பெண்கள் மற்றும் ஆண்கள் அழகு நிலையங்களை தவிர மற்ற அனைத்து விதமாக கடைகளும் கட்டுப்பாட்டுடன்  திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 4-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளித்ததுபோல், பொது போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து சேவை தொடங்கினால், தனி மனித இடைவெளியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். இதனால், பேருந்துகளில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பயணிகள் அளவைவிட பாதி அளவிலேயே பயணிகளை ஏற்ற முடியும். கடும் நஷ்டம்  ஏற்படும். எனவே, ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு 3.20 ரூபாயாக கட்டணம்  வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார். ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

Tags : losers ,Omni ,Loss , Loss of manpower will definitely cause: Omni bus fare to be doubled
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து