×

2 மாத இடைவெளிக்கு பின் பாபநாசத்தில் கரும்பு வெட்டும் பணி

வி.கே.புரம்: பாபநாசம் பகுதியில் இரு மாத இடைவெளிக்குப் பின் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு வெட்டும் பணி துவங்கியுள்ளது. வி.கே.புரம் நகராட்சிக்கு உட்பட்ட பாபநாசம், டாணா அனவன்குடியிருப்பு பகுதியில் 600க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தன. இதில் பொங்காலையொட்டி பல ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட கரும்புகள் அறுவடை செய்யப்பட்டன. மீதமுள்ள பகுதியில் பயிரிடப்பட்ட கரும்புகள் மார்ச் மாத கடைசியில் கரும்பு சாறு கடைகளுக்காக அறுவடை செய்யாமல் விடப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா பரவல் எதிரோலியாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உள்ளதால் கரும்புகளை அறுவடை செய்ய ஆட்கள் இல்லததாலும், போக்குவரத்து வசதி இல்லாமலும் கரும்புகள் சுமார் 2மாதமாக அறுவடை செய்யாமல் இருந்து வந்தது.

தற்பொழுது கட்டுப்படுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் பாபநாசத்தில் மீண்டும் கரும்புகள் வெட்டும் பணி துவங்கியுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கரும்புசாறு கடைகளுக்காக கரும்புகளை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 2 மாதமாக கரும்பு அறுவடை செய்யாமல் இருந்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் பயிரிட்ட கரும்புகளில் பாதிதான் விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதி கரும்புகள் இன்னும் அறுவடை செய்யாமல் உள்ளதாகவும் கூறினர்.

Tags : Papanasam , Sugarcane cutting work , Papanasam ,gap , 2 months
× RELATED அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!