×

ரூ. 20 லட்சம் கோடி என்று பிரம்மாண்டமான அறிவிப்பு. ஆனா புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூடத் தரமாட்டார்கள் : ப. சிதம்பரம் ஆதங்கம்

சென்னை: பொருளாதார மீட்புக்காக மத்திய அரசு அறிவித்திருக்கும் ரூ. 20 லட்சம் கோடி அறிவிப்பை முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார மீட்புத் தி்ட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். அதில் முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ரூ 20 லட்சம் கோடி என்று பிரம்மாண்டமான அறிவிப்பு. ஆனால் புலம் பெயர்ந்து நடந்தே வந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூடத் தரமாட்டார்கள். மக்கள் தொகையில் கீழ்ப் பாதியில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5,000 கொடுங்கள் என்று சொல்கிறோம். ஏழைக் குடும்பங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூடத் தர மறுக்கிறது.இந்த நாட்டின் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் அரசு நம்மை ஆள்கிறது. அத்தனை தடைகளையும் வீடு வந்து சேர்ந்திருக்கும் இடம் பெயர் தொழிலாளர்களுக்கு இப்போது கிராமத்தில் வேலை இல்லை. வருவாய் இல்லை. அந்த தொழிலாளியின் குடும்பம் எப்படி வாழ முடியும்? இவ்வாறு ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Tags : migrant workers ,Chidambaram Source ,Chidambaram Sadal , Rs. 20 lakhs, crores, expanses, announcements, diaspora, workers, p. Chidambaram, Adamgam
× RELATED கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் வெளியூர் வாக்காளர்கள்