×

வறண்டு காணப்படும் வெள்ளாறு குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாறு தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. சேத்தியாத்தோப்பு வெள்ளாறு வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். சேத்தியாத்தோப்பிற்கு மேற்கு பகுதியில், நீண்ட தூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து மணிமுக்தாறு வழியாகவும், திருக்கூடலையாத்தூர் வழியாகவும் மழை நீர் வெளியேறி ஒரு லட்சம் கன அடி மழை நீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாலத்தின் வழியாக வடிகாலாகி பரங்கிப்பேட்டை கடலுக்கு சென்றடையும் வகையில் ஆங்கிலேயர்கள் நீர்வழி பாதையை உருவாக்கியதால், இன்றுவரை கன மழைக்காலங்களில் வெள்ள நீர் புரண்டு வந்து வடிகாலாகிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் வெள்ளாறு தண்ணீரின்றி வறண்டு கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.

வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்ததால், நிலத்தடி நீர் மட்டம் குறையாமலும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு தாகத்தையும் தணித்து வந்தது. ஆனால் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல துவங்கியதில் இருந்து வீராணம் ஏரியின் தண்ணீரை வெள்ளாற்றுக்கு திறந்து விடுவதில்லை, இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. மேலும் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கி வரும் இரு போர்வெல் கிணறும் வெள்ளாற்றில் அமைந்துள்ளது. இதனால், நீலத்தடி நீர் மட்டம் உயர என்எல்சியின் உபரி நீரை வாலாஜா ஏரியில் தேக்கி வைத்து, வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக வெள்ளாற்றுக்கு திறந்து விட வேண்டும் என சேத்தியாத்தோப்பு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Decreased ground ,water, level
× RELATED இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பாஜக நிர்வாகி பலி..!!