×

‘இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே’ இலவச ரேஷன் அரிசியை நிவாரணமாக வழங்கிய பாஜ: பழநி மக்கள் பரபரப்பு புகார்

பழநி: பழநியில் ரேஷன் அரிசியை பாஜ கட்சியினர் நிவாரணமாக வழங்கியதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கால் திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தினக்கூலி தொழிலாளர்கள், கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பியிருக்கும் சாலையோர வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பழநி புறநகர் சிவகிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமநாதன் நகர், மருத்துவ நகர் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு பாஜ சார்பில் நிவாரண உதவி வழங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் திருமண மண்டப வளாகத்தில் ஏராளமானோர் திரண்டனர். அரிசி, மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. ஆனால், பாஜ கட்சியினர் வழங்கிய அரிசி, தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி என புகார் கிளம்பி உள்ளது. ரேஷன் அரிசியை வாங்கி பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜவின் இந்நிவாரண நடவடிக்கை சந்தானம் பட காமெடி வசனம் போல, ‘இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே’ எனக்கூறி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Tags : Baja , cotton bundle , cotton bundle.
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...