×

கொரோனா விவகாரம்: கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள் மீது பழி போடுவதை நிறுத்துங்க...முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதற்கு, கோயம்பேடு  மார்க்கெட் தான் காரணம் என்று அனைவரும் குற்றச்சாட்டு கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா உற்பத்தி சந்தையாக மாறிய கோயம்பேடு மார்க்கெட்டை மூடுவதாக தமிழக அரசு கடந்த 4-ம் தேதி அறிவித்தது.

இருப்பினும், பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடியை அரசு தொடங்கியுள்ளது. இதற்கிடையே, நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 9 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதில், கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 3 ஆயிரத்தை நெருங்கிறது. கடந்த மாதம் 27ம் தேதி கோயம்பேடு சந்தையில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, தமிழகம் மட்டுமின்றி தென்மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆந்திராவில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி செவ்வாய்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 20 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள். கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் ஏற்றி வந்த வயநாடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர், கிளீனருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்க மறுத்ததும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பழி போடுவதை முதல்வர் பழனிசாமி நிறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆயிரம் ரூபாயோடு அனைத்தும் முடிந்து விட்டது என்று நினைக்காமல் ரூ.5,000 நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : affair ,Corona ,traders ,Coimbatore ,MK Stalin ,CM Palanisamy ,CM , Relief of Rs 5,000 without thinking it is all over: MK Stalin's urge to CM
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...