×

சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து 4 சிறப்பு ரயில்களில் 4,000க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர்

சென்னை: சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து பீகார், அஸ்ஸாம், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சிறப்பு ரயில்களில் நேற்று புறப்பட்டு சென்றனர்.  பல்வேறு மாநிலங்களில் வெளி மாநிலத்தை சிக்கியுள்ளவர்களை அழைத்து வர சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களை கணக்கெடுத்து அனுப்பும் பணி தொடங்கியது. இதையடுத்து நேற்றும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் சென்ட்ரல்-பூனே இடையே ரயில் (06143) பிற்பகல் 2.48 மணிக்கு 1092 பயணிகளையும், சென்ட்ரல்-பரூணி இடையே ரயில் (06135) மாலை 4.15 மணிக்கு 1209 பயணிகளை ஏற்றிக் கொண்டு பீகார் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது.

 மேலும் சென்னை சென்ட்ரல்- கவுகாத்திக்கு சிறப்பு ரயில் (06144) 1284 பயணிகளை ஏற்றிக்கொண்டு அஸ்ஸாம் மாநிலத்திற்கும், அதைப்போன்று சென்ட்ரல்- தன்பாத் இடையே ரயில் (06142) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு என 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நான்கு சிறப்பு ரயில்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.


Tags : Central Railway Station , Central Railway Station, 4 special trains
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!