தாசில்தார் அலுவலகம் முற்றுகை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் சொந்தமாக முடி திருத்தும் நிலையம் வைத்துள்ளனர். மேலும், பலர் தினக்கூலி வேலையும் செய்து வருகின்றனர்.  ஊரடங்கிலிருந்து முடி திருத்தகங்களுக்கு அனுமதியில்லாததால் இந்த தொழிலாளர்கள் வருமானம் என்று மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெரு அருகே உள்ள தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களுடைய வாழ்வாதாரம்  மோசமாகி உள்ளதால் முடி திருத்தங்களை திறந்து செயல்பட அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரி அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>